எல்லாமத தலைவர்களின் சமுதாய ஒழுக்கத்தை பற்றிய கருத்துக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இந்த கருத்துக்கள் சமய நல்லிணக்கத்துக்கும், நாட்டு அமைதிக்கும் மேலும் மனிதாபிமான செயல்பாடுகளுக்கும் அடித்தளமாக அமைந்து உள்ளது. எங்கள் அறக்கட்டளை இந்த மகான்களின் கருத்துக்களையும் அவர்களின் வாழ்கை வரலாற்றையும் பல வேறு தருணங்களில் புத்தக வடிவாக கொண்டுவருவதில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளது. இதன் முதல் கட்டமாக ஆதி சங்கரரை பற்றிய ஒரு சித்திர கதை புத்தகம் குழந்தைகளுக்காக அச்சிட பட்டுள்ளது. இந்த புத்தகம் இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் அதை ஒட்டிய கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்க வுள்ளோம்.
இதே போன்று இந்தியா முழுவதும் உள்ள IITs, IIMs, NITs (RECs) மற்றும் IISc போன்ற எல்லா கல்வி ஸ்தாபனங்களிலும் கலந்துரையாடல் நடத்த உள்ளோம்.
வரும் நாட்களில் இதே போன்று சுவாமி ராமானுஜர், மத்வாச்சாரியார், ஏசு கிறிஸ்து, முகமது நபி, பகவான் மகாவீரர், புத்தர் போன்ற மற்றைய மத குருமார்களை பற்றிய நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளோம்.