About Us

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான பல்வேறு உதவிகளை இயன்ற அளவில் செய்வதற்காகவும், மேலும் சமுதாயத்தில் கடைபிடிக்கவேண்டிய மேனமையான ஒழுக்க நெறிகளையும், நமது பாரம்பர்யத்தை காப்பாற்றவேண்டிய கடமையையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி அவர்களை நம்முடைய நாட்டின் உயர்ந்த கொள்கைகளை உடைய குடிமகன்களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை தான் மாத்ருசாயா பௌண்டேஷன். மேற்கூறிய பண்புகள் நம் எல்லோரிடமும் ஒற்றுமையையும் பிறரை மதிக்கக் கூடிய கலாச்சாரத்தையும் உருவாக்கும் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை. www.mathruchaya.org

ராதாகல்யாண மஹோத்சவம்

ஸ்ரீ காமகோடி பீடம் ஆச்சார்யர்களின் அணுக்ரத்தால் பிப்ரவரி மாதம் 28, மார்ச் 1 தேதிகளில் ஸ்ரீ கான்பூர் மஹாதேவன் தலைமையில் மேற்கு மாம்பலம் சங்கரமடத்தில் ராதாகல்யாண மஹோத்சவம் வெகுவிமரிசையாக நடை பெற்றது.

ராதாகல்யாண புகைப்படங்கள்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

எல்லாமத தலைவர்களின் சமுதாய ஒழுக்கத்தை பற்றிய கருத்துக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இந்த கருத்துக்கள் சமய நல்லிணக்கத்துக்கும், நாட்டு அமைதிக்கும் மேலும் மனிதாபிமான செயல்பாடுகளுக்கும் அடித்தளமாக அமைந்து உள்ளது. எங்கள் அறக்கட்டளை இந்த மகான்களின் கருத்துக்களையும் அவர்களின் வாழ்கை வரலாற்றையும் பல வேறு தருணங்களில் புத்தக வடிவாக கொண்டுவருவதில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளது. இதன் முதல் கட்டமாக ஆதி சங்கரரை பற்றிய ஒரு சித்திர கதை புத்தகம் குழந்தைகளுக்காக அச்சிட பட்டுள்ளது. இந்த புத்தகம் இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் அதை ஒட்டிய கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்க வுள்ளோம். இதே போன்று இந்தியா முழுவதும் உள்ள IITs, IIMs, NITs (RECs) மற்றும் IISc போன்ற எல்லா கல்வி ஸ்தாபனங்களிலும் கலந்துரையாடல் நடத்த உள்ளோம். வரும் நாட்களில் இதே போன்று சுவாமி ராமானுஜர், மத்வாச்சாரியார், ஏசு கிறிஸ்து, முகமது நபி, பகவான் மகாவீரர், புத்தர் போன்ற மற்றைய மத குருமார்களை பற்றிய நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளோம்.

ஆதி சங்கரா - ஐ ஐ டி புகைப்படங்கள்

மேல்பாப்பாம்பாடி கோயில் திருப்பணி

செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பாதையில் உள்ள கிராமம் மேல்பாப்பாம்பாடி. இங்கு மெயின் ரோடின் அருகாமையில் அமைந்திருக்கும் பெரியநாயகி சமேத கரைகண்டேஸ்வரர் கோயில் மிகப்பழமை வாய்ந்தது. கடந்த ஐம்பது வருடங்களாக இந்த கோவிலில் வழிபாடு நடைபெறவில்லை. காஞ்சி காமகோடி ஆச்சார்யர்களின் அருளாசியுடன் ஊர் மக்களும், எங்கள் அறக்கட்டளையும் இணைந்து திருப்பணிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம்.
வாய் வழிச் செய்தி: வாழப்பந்தல் கிராமத்தில் அம்பாள் தவத்தில் இருந்தபொழுது ஒரு மாலைப்பொழுதில் முருகப்பெருமானை தண்ணீர் எடுத்துவரப் பணித்தாள். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை செங்கம் முதல் போளூர் வரை படர்ந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் செலுத்தினார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் வேலாயுதத்தின் பெருமையால் மோக்ஷம் அடைந்து விட்டார்கள். ஆகவே மலையிலிருந்து தண்ணீர் குருதி ஆறாக பெருக ஆரம்பித்துவிட்டது.
இந்த ஆறு உமாதேவியின் விருப்பத்திற்கு ஏற்ப பரிசுத்தமான தண்ணீராக மாறிவிட்டது. இதனால் இந்த ஆறு முருகன் பெயரால் சேயாறு எனவும் குருதி பெருக்கால் செவ்வாறு எனவும் இப்பொழுது செய்யாறு எனவும் வழங்கப்படுகிறது.
செய்யாறுக்கு கிழக்கே இருக்கும் கோயில்களில் உள்ள சுவாமிக்கு கைலாசநாதர் என்றும் மேற்க்கே உள்ள கோயில்களின் சுவாமிக்கு கரைகண்டேஸ்வரர் என்ற பெயரும் உள்ளது.
6-3-2009 அன்று பாலாலயம் செய்யப்பட்டது. ஆச்சார்யர்களின் ஆசீர்வாதத்துடன் 22-11-2009 அன்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது.
பெரியவர்களின் கூற்றுப்படி புனர் உத்தாரண ( திருப்பணி ) கைங்கர்யத்தில் இயன்றவரையில் கலந்துகொண்டால் விதி மாறும், நன்மை பெருகும். கோவிலின் புகைப்படங்கள்

கும்பாபிஷேக புகைப்படங்கள் 22-11-2009

வேதபாராயணம்

கார்த்திகை மாதங்களில் பல்வேறு இடங்களில் உலக நன்மைக்காக வேதவிற்பன்னர்களால் வேதபாராயணம் நடத்தபடுகிறது. எங்கள் அறக்கட்டளையும்இந்த அரிய கைங்கர்யத்தில் பங்கு பெறுகிறது.

கணபாராயண் புகைப்படங்கள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நம்முடைய சகோதரர்களுடன் முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு தேவையான கம்பளம், காலணி மற்றும் உணவுவகைகளையும் கொடுத்து அவர்களுடன் சந்தோஷமாக கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள்

பக்ரித் கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் பக்ரித் ரம்ஜான் பெரு நாட்களில் எங்களால் முடிந்தஅளவில் நம்முடிய சகோதரர்களுக்கு இனிப்பு, துணி மணிகள் மற்றும்உணவுப்பண்டங்கள் கொடுத்து அவர்களுடன் ஈத் பெருநாளை சந்தோஷமாககொண்டாடுகிறோம்.

பக்ரித் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள்

காயத்ரி ஹோமம்

நமது காஞ்சி காமகோடி பீடம் ஆச்சார்யர்களின் அனுக்ரகதுடன் ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கு மாம்பலம்சங்கர மடத்தில் காயத்ரி ஹோமம் நடைபெறும். ஹோமம் ஒன்பது மணிக்குஆரம்பித்து மதியம் பனிரெண்டு மணியளவில் முடிவடையும். ஹோமம் முடிந்தவுடன் மகா பிரசாதம் விநியோகிக்கப்படும். காயத்ரி ஹோமம் புகைப்படங்கள்